மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

by Admin / 29-01-2022 10:41:18am
 மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களான பயன்படுத்தி ஊசிகள் காலி மருந்து பாட்டில்கள் போன்றவை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

ஆனால் அரசின் உத்தரவை மீறி பல இடங்களில் மருத்துவ கழிவுகளை சாலையோரங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அருகே சாக்கடை கால்வாய் ஒரம் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளான ஊசிகள் மற்றும் மருந்து காலி பாட்டில்கள் ஏராளமானவை கொட்டப்பட்டு உள்ளது.

இவை அனைத்தும் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்துகள் பாட்டில்கள் என தெரிய வருகிறது.
 
இந்த ஊசிகள் காலி மருந்து பாட்டில்கள் முற்றிலும் சேதம் அடைந்து அதில் இருந்து  துர்நாற்றம் வீசுகிறது மேலும் இந்த கழிவுகளில் நாய் பன்றி ஆடுமாடுகள் சுற்றுவதால் நோய் தொற்று பரவும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மருந்து கழிவுகளை கொட்டிய நபர்களை கண்டுயறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்றவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via