அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 01-10-2024 10:45:29pm
அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி.

ஆவடியில் உள்ள நூலகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இயங்கும் கிளை நூலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கட்டடம் சிதிலமடைந்து காணப்படும் நிலையில், நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், புதிய கட்டடத்திற்கு நூலகத்தை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கையை உடனே மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

உணவு ஒவ்வாமை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை காலை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

Share via