குருத்தோலை பவனி விழா கோலாகலம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்து கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் ஆகும். ஈஸ்டருக்கு முன்பு கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர். இந்த வருடத்தின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22 ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.
இந்ததவக்காலத்தின்கடைசிஞாயிற்றுக்கிழமைகுருத்தோலைஞாயிறுதிருநாளாககடைப்பிடிக்கப்படுகிறது.
இதனால் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும்இன்று குருத்தோலை ஞாயிறுதிருநாள் பவனி நடைபெற்றது.வேளாங்கண்ணியில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம் உலகப்புகழ்பெற்றது. இங்கு குறுத்தோலை ஞாயிறு இன்று காலை குறுத்தோலை பவனியுடன் துவங்கியது.கன்னியாகுமரி மாவட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடந்தது. குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தலம் சார்பில் மரமடி குருசடியிலிருந்து குருத்தோலை பவனி தொடங்கி பீச் சந்திப்பு வழியாக காணிக்கை அன்னை திருத்தலம் சென்றது. இதில் சிறுவர்கள், பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டு 'தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா'என்று பாடல் பாடி சென்றனர்.
Tags :