கெர்சனில் நுழைந்தது ரஷிய ராணுவம்

by Admin / 01-03-2022 02:51:07pm
கெர்சனில் நுழைந்தது ரஷிய ராணுவம்

உக்ரைன் மீது ரஷியா இன்று 6வது நாளாக போர் தொடுத்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை.

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. 

தொடர்ந்து உக்ரைனின் ராணுவ தளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷியா தாக்குதலை தொடுத்து வருகிறது.
 
இந்நிலையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கெர்சன் நகரை ரஷிய ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்டதாகவும், நகரம் இன்னும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via