ஏழுமலையானை தரிசனம் 1.30 மணிநேரத்தில்  மக்கள் ஆன்லைன் மூலம் 5 இலட்சம் பேர் முன்பதிவு செய்தனர்.

by Editor / 12-11-2022 09:41:46am
ஏழுமலையானை தரிசனம் 1.30 மணிநேரத்தில்  மக்கள் ஆன்லைன் மூலம் 5 இலட்சம் பேர் முன்பதிவு செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திருமலை - திருப்பதி தேவஸ்தானம்  "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்கதர்களுக்கு ரூ.300 டிக்கெட் நேற்று காலை 10 மணி முதல் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது.வெளியிடப்பட்ட 1.30 மணிநேரத்தில்  மக்கள் ஆன்லைன் மூலம் 5இலட்சம் பேர் முன்பதிவு செய்தனர்.

 

Tags :

Share via