ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜ்குரு.

by Staff / 15-04-2022 01:43:03pm
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜ்குரு.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இதில் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சி இடத்தை பிடிக்க ஆம் ஆத்மி கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.

குஜராத் சென்ற ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் மாற்றத்தை தர போவதாக கூறினார். கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ராஜ்குரு, ஆம் ஆத்மி கட்சியில் தன்னை  இணைத்து கொண்டார்

 

Tags :

Share via