அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவர் வெற்றி
உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 9 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், பிரேசில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ 49.10 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் பிரேசில் அதிபாராக வெற்றிபெற்றுள்ளார். புதிய அதிபராக தேர்வான லுலு டா சில்வா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார்.
Tags :