தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் வானிலை மையம் தகவல்

by Editor / 19-09-2022 08:18:58am
 தமிழக கடலோர மாவட்டங்களில்  மழை பெய்யக்கூடும்  வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 5, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) 4, புழல் (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்) தலா 3, திருத்தணி PTO (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 2, சோழவரம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 1 மழை அளவு பதிவாகி உள்ளது.

 

Tags :

Share via

More stories