சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை

by Staff / 24-09-2022 01:21:39pm
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை - கேகேநகரில் தந்தை மகனை அடிக்க பயன்படுத்திய லத்தி, சிலம்பம் கம்பை அடையாளம் காட்டி தலைமை காவலர் சாட்சியம்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.  

இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது.

அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.வழக்கில் சாட்சிய விசாரணை தொடங்கியபோது தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ஆஜராகி
ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் அடிக்க பயன்படுத்திய லத்தி மற்றும் சிலம்பு கம்பு போன்றவற்றை நீதிபதி முன்பு அடையாளம் காட்டினார்.

அதன்பின்னர் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவலர் முத்துராஜாவின் வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ஆய்வாளர் ஶ்ரீதர் ஆகியோர் தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற்றது.இதனையனுத்து எதிரிகள் தரப்பின் குறுக்கு விசாரணைக்காக வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

 

Tags :

Share via