சைபர் கிரைம் என்றால் என்ன...தெரிந்துகொள்வோம் ..
நம் கையிலுள்ள தொழில்நுட்ப விஷயங்களான கைபேசி, இணையம், கணினி இவற்றைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் அனைத்து குற்றங்களுமே சைபர் குற்றங்களுக்குள் தான் அடங்கும். உதாரணத்திற்கு சில குற்றங்களைச் சொல்லலாம்.
நீங்கள் ஆன்லைனில் ஏதாவது பொருள் வாங்கும்போது உங்களுக்கு அந்த பொருளை அனுப்பாமல் வேறு ஏதாவது பொருளை அனுப்புவது.உங்களுடைய கைபேசி எண்ணைத் தெரிந்துகொண்டு ஃபோன் கால் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ ஏதாவது தொந்தரவு தருவது.
இணைய வழி பரிவர்த்தனையில் உங்கள் பணத்தைத் திருடுவது.நம்முடைய தனிநபர் தகவல்களை தரவுகளை எடுப்பது.இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை தவறாக சித்தரிப்பது.அந்தரங்க விஷயங்களை தெரிந்துகொண்டு பிளாக்மெயில் செய்வது.கடன் தருவதாக கூறி
பின்பு நம்மிடம் மோசடியாக பணம் பறிப்பது.நம்முடைய அலைபேசி எண்ணை தெரிந்து கொண்டு விளம்பரம் என்ற பெயரில் நம்மை ஓயாமல் தொந்தரவு செய்வது கூட.இவை அனைத்துமே சைபர் குற்றங்கள்தான்.
சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிப்பதற்கு மூன்று வழிகள் உள்ளன. சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகாரளிப்பதற்கு அரசாங்கத்தின் வலைதளப்பக்கம் ஒன்றுள்ளது. www.cybercrime.gov.in என்ற தளத்தில் நீங்கள் புகார் தரலாம். இந்த வலைதளத்தில் உங்களுடைய புகாரைப் பதிவு செய்த பின்னர் புகார் விசாரணைக்கு வரும்போது காவல்துறையே உங்களைத் தொடர்பு கொண்டு விசாரிப்பார்கள். இரண்டாவது நீங்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் எந்த காவல் நிலையத்திலும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யலாம். மூன்றாவது சைபர் குற்றங்களை விசாரிப்பதற்கென்று இருக்கும் சிறப்புப் பிரிவுகளிலும் நீங்கள் புகாரளிக்கலாம். சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது ஏதாவது உதவி தேவைப்பட்டாலோ அதற்கு அரசின் ஒரு உதவி எண்ணும் உள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிப்பதற்கு உதவும் எண்: 155260. இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களுக்கு விடையை அறிந்து கொள்ளலாம்.
Tags : சைபர் கிரைம் என்றால் என்ன...தெரிந்துகொள்வோம் ..