கள்ளக்காதல்: 5 மாத குழந்தையை கொன்ற தாய்

by Staff / 22-08-2024 04:15:05pm
கள்ளக்காதல்: 5 மாத குழந்தையை கொன்ற தாய்

கள்ளக்குறிச்சி வடலூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (21) என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதற்கு இடையூறாக இருந்த 5 மாத பச்சிளம் குழந்தையைக் கொலை செய்து சாக்கடையில் வீசியுள்ளார். மேலும், தனது குழந்தையைக் கணவர் கடத்தியதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை தெரியவந்த நிலையில் ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். பின்னர், குழந்தையின் உடலை மீட்ட உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

Tags :

Share via