2021ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச்சமுதாய உயர்வுக்கும்தொண்டாற்றி வருவோரை
கெளரவித்துஆண்டுதோறும் பேரறிஞர்கள்-தலைவர்கள் பெயரில் விருது வழங்கி விருதாளர்களைச்சிறப்பித்து
வருகிறது. அந்தவகையில் 2021ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்திற்கும் மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமனுக்கும் சொல்லின் செல்வர் விருது சூர்யா சேவியருக்கும் . சிங்காரவேலர் விருது கவிஞர் மதுரக்கூர் இராமலிங்கத்திற்கும், தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது இரா. சஞ்சீவிராயருக்கும் வழங்கப்படவுள்ளது சி.பா ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு தேவநயேப்பாவாணார் விருது கு. அரசேந்திரனுக்கும், உமறுப்புலவர் விருது நா.மம்மதுவுக்கும்அறிவிக்கப்பட்டுள்ளது,
2021ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதாளர்களுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகைரூ100,000/-லிருந்துரூ200,000/-உயர்த்தியும
மற்றும் ஒரு சவரன் தங்ப்பதக்கம்,விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச்சிறப்பிக்கப்பெறுவர்.
Tags :