பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 பேர் பலி - 4பேர் படுகாயம்

by Staff / 01-09-2024 05:13:31pm
பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 பேர் பலி - 4பேர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ளது குறிப்பன்குளம் கிராமம். இங்கு ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற பெயரில் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலை 5 மணிக்கு சென்றுவிடுவார்கள்.

இன்று மாலையில் பணி முடிந்ததும் தொழிலாளர்கள் வெளிேய வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த 2 அறைகளும் அடுத்தடுத்து நொறுங்கி விழுந்து கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து உடனடியாக நாசரேத் போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு கட்டிட இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உடல் கருகி இறந்து கிடந்தனர். போலீசார் உடலை மீட்டு சக்தி வருகின்றனர்
 

 

Tags :

Share via

More stories

Logo