கிணற்றில் விழுந்த மகன்.. காப்பாற்ற சென்ற தந்தை பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் கிணற்றில் விழுந்த மகனை காப்பாற்ற சென்ற தந்தை விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். மப்பேட்டில், குடிநீர் பற்றாக்குறை காரணமாக அனுமதியின்றி தோண்டப்பட்ட கிணற்றில் மகன் விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்றச் சென்ற தந்தை, விஷவாயு தாக்கி உயிரிழந்தார். பின்னர், அக்கம்பக்கத்தினர் மகனை மீட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :