மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியஎடப்பாடி பழனிச்சாமி.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தேவர்ஜெயந்தியை யொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த மதுரை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி. உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags : மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியஎடப்பாடி பழனிச்சாமி.