“ஸ்டாலின் நாடு காக்க துடிக்கும் நல்லவர்”  ரூ.5 லட்சம் நிதி வழங்கிய வைரமுத்து உருக்கம் 

by Editor / 15-05-2021 07:40:25pm
“ஸ்டாலின் நாடு காக்க துடிக்கும் நல்லவர்”  ரூ.5 லட்சம் நிதி வழங்கிய வைரமுத்து உருக்கம் 



கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் பொதுமக்களின் பங்களிப்பை வழங்கும்படி அரசு கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக யார் யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள், அந்த நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பதைப் பொதுவெளியில் காட்டப்படும் என்று அரசு உறுதியளித்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாய் நிதி அளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கினேன். மனம்விட்டு உரையாடினோம். முதலமைச்சர் பண்பாட்டில் பழுத்திருக்கிறார்; நல்லாட்சி குறித்தே கனவு காண்கிறார்; செயல் குறித்தே திட்டமிடுகிறார்; நாடுகாக்கத் துடிக்கும் நல்லவரை வாழ்த்தினேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக தனது திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிக்கொள்ள அனுமதிப்பதாக வைரமுத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories