நினைவு நாணயத்தை நினைவுப் பரிசாக வழங்கிய திமுக
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நினைவுப் பரிசாக வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற விழாவில் கலைஞர் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இதில் கலந்துகொண்ட செல்வப்பெருந்தகைக்கு, சத்தியமூர்த்திபவனில் நாணயம் ஒன்றை ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்.
Tags :



















