புதிய மீன் விற்பனைக் கூடத்தை ஆய்வு செய்த உதயநிதி

by Staff / 20-08-2024 03:39:09pm
புதிய மீன் விற்பனைக் கூடத்தை ஆய்வு செய்த உதயநிதி

சென்னை சேப்பாக்கம் தொகுதி சிந்தாதிரிப்பேட்டை மீன் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சிங்காரச் சென்னை 2.0 மற்றும் சென்னை மாநகராட்சி நிதி ரூ.2.19 கோடி மதிப்பில், புதிய மீன் விற்பனைக் கூடம் கட்டப்பட்டுள்ளது. மீன் வியாபாரிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த மீன் விற்பனைக் கூடத்தில் இன்று அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். மேலும், இதனை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க அதிகாரிகள், அலுவலர்களை அவர் வலியுறுத்தினார்.

 

Tags :

Share via