திருவள்ளுவரை களவாட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம்-வானதி சீனிவாசன்.
திருவள்ளுவர் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது, “கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டியவர் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளராக இருந்த ஏக்நாத் ரானடே தான். திருவள்ளுவரை களவாட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம், திரும்ப திரும்ப மற்றவர்கள் மீது பழி சுமத்திக் கொண்டிருக்கிறது. திருக்குறளை உண்மையிலேயே படிப்பவர்கள், திருவள்ளுவர் தெய்வப்புலவர் என்பதை உணர்வார்கள்" என்றார்.
Tags : திருவள்ளுவரை களவாட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம்,