அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

by Admin / 22-01-2025 10:33:19am
அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், என்னை அமாவாசை என விமர்சிக்கும் செந்தில் பாலாஜி 5 கட்சி தாவியவர். சேகர்பாபு, செந்தில் பாலாஜி போன்றோர் அரசியல்வாதிகள் அல்ல அரசியல் வியாபாரிகள் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
பாஜக தேசிய கட்சி. அவர்கள் எந்த தலைவரை மாற்றுவார்கள் என்பதை சொல்வதற்கு எங்களுக்கு பவர் இல்லை. அதெல்லாம் ஏன் சார் கேட்குறீங்க. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என பேட்டியளித்துள்ளார். 

 

Tags :

Share via