கேரள வய நாட்டில் ஏற்பட்ட  நிலச்சரிவுகள் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக தமிழக அரசு நிதி ரூ.5 கோடி நிவாரண நிதி.

by Admin / 31-07-2024 02:10:18am
கேரள வய நாட்டில் ஏற்பட்ட  நிலச்சரிவுகள் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக தமிழக அரசு நிதி ரூ.5 கோடி நிவாரண நிதி.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம் எக்ஸ் பதிவில்,
வயநாட்டில் ஏற்பட்ட  நிலச்சரிவுகள் மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். 

அப்பகுதியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன். 

இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் தளவாட அல்லது மனிதவள ஆதரவை நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மலையாளி சகோதரர்களின் துயரத்தில் தமிழகம் பங்கு கொள்கிறது. 

மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக ரூ.5 கோடி தருகிறோம். உதவிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவையும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவையும் அனுப்புகிறோம்.
எங்கள் ஆதரவை வழங்க, தோழர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் பேசினேன்.  ஒன்றாக இணைந்து இந்த நெருக்கடியை சமாளிப்போம்! 

 

Tags :

Share via