செந்தில் பாலாஜி ஜாமின்: தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் மனு மீதான விசாரணை தொடங்கியது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags :