15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

by Editor / 14-08-2022 12:06:28pm
15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சுதந்தர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கபட்டது. விருதுகள் பெறுவோர்களுக்கு 8 கிராம் தங்கப்பதக்கமும் ரூ.25,000 பரிசும் வழங்கப்படும். 5 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச்சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சிவராமனுக்கு சிறந்த பொதுச்சேவைக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை போக்குவரத்து காவல் உதவியாளர் பழனியாண்டி, தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மா.குமாருக்கும் இந்த பதக்கம் அறிவிக்கப்பட்டது. கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் கடலூர் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் முதலமைச்சரி காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via