காங்கிரஸ் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் ராஜினாமா
இமாச்சலப் பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, அமைச்சர் விக்ரமாதித்ய சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது சரியல்ல. வரும் நாட்களில் மக்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன் என கூறினார். இவர் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங்கின் மகன் ஆவார். ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால், ஆளும்கட்சியே தோல்வியை தழுவியது. இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Tags :



















