தங்கம் விலை திடீர் சரிவு

by Staff / 20-10-2022 12:10:10pm
தங்கம் விலை திடீர் சரிவு

கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி ஒரு சவரன் (8 கிராம்) 22 காரட் தங்கம் ரூ.39,056-க்கு விற்கப்பட்ட நிலையில், கடந்த பத்து நாட்களாக ரூ.37,500 முதல் ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.அதன்படி இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,685 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 61,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 61 ரூபாய்க்கு விற்பனையாகிறது

 

Tags :

Share via

More stories