தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் ஜெர்பரா மலர்களால் அலங்காரம்

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் ஜெர்பரா மற்றும் சைக்ளமென் மலர்கள் கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தற்போது 2ம் சீசனுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால் 7 ஆயிரம் தொட்டிகளிலும் மலர் நாற்றுக்கள் நடவு பணிகள் நடந்து வருகிறது.
சீசன் துவங்க ஒரு மாதமே உள்ள நிலையில், பூங்காவை மேம்படுத்த ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால், பூங்கா முழுவதிலும் தற்போது மலர்கள் இன்றி காணப்படுகிறது.
பெரும்பாலான பாத்திகளில் தற்போது நடவு பணிகள் முடிக்கப்பட்டு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
அடுத்த மாதம் இறுதி வாரம் முதல் அனைத்து செடிகளிலும் மலர்களை காண வாய்ப்புள்ளது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் தற்போது பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
கண்ணாடி மாளிகை நுழைவு வாயில் பகுதியில் ஜெர்பரா மற்றும் சைக்ளமென் மலர்களை கொண்டு தற்போது அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர பல வண்ண மலர்களை கொண்டு கண்ணாடி மாளிகையில் மலர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்து வருகிறது. எனினும், சுற்றுலா பயணிகள் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Tags :