பெங்களூரில் தீப்பிடித்து எரிந்த தனியார் பஸ்கள்

by Staff / 30-10-2023 03:20:17pm
பெங்களூரில் தீப்பிடித்து எரிந்த தனியார் பஸ்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வீரபத்ர நகரில், தனியார் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டெப்போவில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பேருந்துகள் மளமளவென தீப்பற்றி எரிந்தன. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 பேருந்துகள் தீயில் கருகி சாம்பலாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழப்பு அல்லது காயம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தீ விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories