தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது - பிரேமலதா நெகிழ்ச்சி

by Editor / 10-05-2024 12:07:22am
  தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது - பிரேமலதா நெகிழ்ச்சி

மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கினார். இந்த விருதினை கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்றவுடன் பிரேமலதா வானத்தை நோக்கி பார்த்து கேப்டனை நினைவு கூர்ந்தார். முன்னதாக விருதினை வாங்க செல்லும் பொது பிரதமர்  மோடிக்கு வணக்கம் தெரிவித்தவாறு சென்றார்.இந்த நிகழ்வில் விஜயகாந்தின் மகன்,மைத்துனர் உள்ளிட்டோரும் கலந்துகொணடனர். 

 

Tags :   தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது - பிரேமலதா நெகிழ்ச்சி

Share via