ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் படுகொலை வழக்கு-தீவிர நடவடிக்கை.

by Editor / 19-03-2025 11:30:45pm
 ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் படுகொலை வழக்கு-தீவிர நடவடிக்கை.

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் படுகொலை வழக்கில், தீவிர விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அனைவரும் பாரபட்சம் இன்றி நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து  தப்ப முடியாது என முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

குற்றவாளிகள் தொடர்பாக கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனே சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். சுற்றிச் சுற்றி வருகின்றனர் என்று கூறியிருந்தார். மேலும் காவல்துறை உதவி ஆணையர் செந்தில் குமார், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரது பெயர்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பின்னணியில் பள்ளிவாசலுக்கு அருகிலேயே புனிதரமலான் நோன்பு வைக்கப்பட்டுள்ள நேரத்தில் நடந்த இந்த சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சி அலையை  ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் பேசுகையில், ஜாகிர் உசேனுக்கு ஏற்கனவே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே புகார் அளித்துள்ளார். விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

இந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் படுகொலை வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்து பேசினார். இதில் நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேனுக்கும், தெளபீக் என்பவருக்கும் ஏற்கனவே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த  கொலை வழக்கில் இருவர் சரண் அடைந்துள்ளனர். பிற குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.என்றும் 

இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அனைவரும் பாரபட்சம் இன்றி நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சனையில் திமுக கடுமையாக இருக்கும் என முதல்வர் கூறினார்.

இந்த நிலையில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆணையர் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் அவரது மகன்  வெளியிட்டுள்ள வீடியோவும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

 

Tags :  ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் படுகொலை வழக்கு-தீவிர நடவடிக்கை.

Share via