திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தவரை சரமாரியாக தாக்கி தப்பிய  வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு. 

by Staff / 03-10-2025 09:14:55am
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தவரை சரமாரியாக தாக்கி தப்பிய  வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு. 

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தினந்தோறும் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த விஜய் ஆனந்த் என்பவர் நேற்று இரவு கிரிவலம் மேற்கொண்டு மத்திய பேருந்து நிலையம் அருகே வரும்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ரவுண்டானா அருகே விஜய் ஆனந்த் வந்து கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அவரை மீண்டும் வழி மறித்து தாக்க முயற்சித்துள்ளனர்.தன்னை தற்காத்துக் கொள்ள  விஜய் ஆனந்த் அவர்களை தாக்க முயற்சித்து அங்கிருந்து புறப்பட்ட நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்  எதிர்பாராத நேரத்தில் பின்னால் தொடர்ந்து வந்து தாக்கியதில் கிரிவல பக்தர் மயக்கமடைந்து சாலையிலேயே பரிதாபமாக விழுந்தார்.இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கிரிவலம் பக்தரை தாக்கி அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பித்தார்.இதனை அங்கு கூடியிருந்தவர்கள் படம் பிடித்த நிலையில் உடனடியாக திருவண்ணாமலை மாநகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாநகர காவல் துறையினர் விஜய் ஆனந்தை தாக்கி தப்பித்த மர்ம நபரை பொதுமக்கள் கொடுத்த வீடியோ ஆதாரங்களுடனும், சிசிடிவி காட்சியின் ஆதாரங்களுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தாக்கப்பட்டவர் பெயர் இதுவரை தெரியாத நிலையில் தாக்குதலுக்கு காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில்.

 சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த விஜய் ஆனந்த் என்பதும், இவர் தனது குடும்பத்துடன் அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு, மனைவி மற்றும் மகன்களை விடுதியில் விட்டுவிட்டு இவர் மட்டும் தனியாக கிரிவலம் மேற்கொண்ட போது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

கிரிவல பக்தரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் தாக்கியதில் மயக்கம் அடைந்ததால் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே பெரும் பரபரப்பு நிலவியது.
 

 

Tags : திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தவரை சரமாரியாக தாக்கி தப்பிய  வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு 

Share via