வெள்ள தடுப்பு திட்டம்: மத்திய அரசு ரூ.150 கோடி ஒதுக்கீடு மத்திய அரசு அனுமதி

by Staff / 01-08-2024 01:45:45pm
வெள்ள தடுப்பு திட்டம்: மத்திய அரசு ரூ.150 கோடி ஒதுக்கீடு மத்திய அரசு அனுமதி

சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு வெள்ளத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் முதல் நகர்ப்புற வெள்ளத்தணிப்புத் திட்டத்தில் ரூ.561.29 கோடி சென்னைக்கு ஒதுக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் ரூ.500 கோடியும் அடங்கும். இந்த நிலையில் சென்னை வெள்ள தடுப்பு திட்டத்துக்கு முதல் தவணையாக ரூ.150 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo