திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டபள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை .
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவம்பர் 24) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால், மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. இந்த அறிவிப்பை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
Tags : திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டபள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை .


















