இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று முதல் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.. குறிப்பாக ,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை தொடரும்.
நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்....
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளி சமயத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு..
திருநெல்வேலி மாவட்டத்தில் நாலுமூக்கு, ஊத்து போன்ற பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது...
தொடர்ச்சியான மழை: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்த மாத இறுதி வரை தினமும் மழை பெய்யக்கூடும்...
Tags :