முட்டை விலை ரூ.5.75-ல் இருந்து 20 காசுகள் குறைந்தது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ.5.55-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, மக்களிடையே முட்டை நுகர்வு குறைந்துள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலை மாற்றம் செய்யப்பட்டதாலும் நாமக்கல் மண்டலத்திலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.5.75-ல் இருந்து 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
Tags : The price of eggs has decreased by 20 paise from Rs. 5.75.