மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய இபிஎஸ் வலிறுத்தல்
தேர்தல் வாக்குறுதியளித்த, திமுக அரசின் முதலமைச்சரே மாணவர்களின் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த ஏதேனும் முயற்சிகளை செய்தீர்களா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என்பதை அறிந்திருந்தும், அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், நீட் விவகாரத்தில் அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது தொடங்கி, கல்விக் கடன் ரத்து செய்வது வரை, மாணவர்களை ஏமாற்றி அவர்களின் எதிர்காலத்தை வஞ்சிக்கிறது. திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்து துயர் துடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags :