எளிமையாக வழிபாடு நடத்திய திருநங்கைகள்!

by Editor / 28-04-2021 09:23:46am
எளிமையாக வழிபாடு நடத்திய திருநங்கைகள்!

உளுந்தூர்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கொரோனா காரணமாக களையிழந்தது. ஆண்டுதோறும் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் ஆடல் பாடல், அழகு போட்டி என அமர்க்களப்படுத்தி வருவர். இந்த விழாவில் கலந்து கொள்ள டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்கள் மட்டுமின்றி, பல வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வந்து கலந்துகொள்வர்.
இவ்விழாவில் கோவில் பூசாரிகள் கையால் தாலி கட்டிக் கொள்ளும் திருநங்கைகள், அரவானைக் கணவனாக நினைத்து ஆடிப்பாடி மகிழ்வர். பின்னர் நடக்கும் தேரோட்டத்திலும் கலந்து கொண்டு, இறுதி சடங்காக, தாலியை அறுத்து, பொட்டை அழித்து, வெள்ளை உடை அணிந்து ஒப்பாரி வைத்து அழுவர். இந்நிலையில் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் கொரானா பரவல் காரணமாக திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் நூற்றுக்கணக்கில் கூத்தாண்டவர் கோயிலில் கூடிய திருநங்கைகள் கோவில் வாசலில் சடங்குகள் செய்து வழிபாடு நடத்தினர். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூவாகம் திருவிழா ரத்து செய்யப்பட்டதால், பூட்டிய கோயில் வாசலில் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு சென்றனர்.

Tags :

Share via