இன்று முதல் மின்சார ரயில் சேவை பெறுகிறது திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கம்.

ருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது.
தற்போது அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் மின்சார என்ஜின் மூலம் இந்த மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில்களும் இயக்கப்படுகிறது. இதனால் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது
இந்த மின்சார ரயில் சேவையால் 16105/16106 சென்னை - திருச்செந்தூர் மற்றும்
16731/ 16732 பாலக்காடு - திருச்செந்தூர் ரயில்கள் திருநெல்வேலியில் வைத்து டீசல் என்ஜின் மாற்றும் தேவை இருக்காது.
ஏப்ரல் 1 முதல் திருநெல்வேலி - திருச்செந்தூர் இருமார்க்கத்திலும் புதிய நேர மாற்றங்களும் அமலுக்கு வருகிறது.
Tags :