உலகின் மிகவும் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா

by Staff / 22-01-2024 11:46:53am
உலகின் மிகவும் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா

ரஷ்யா அதிபர் புட்டினின் ஆண்டு வருமானம் 140,000 டாலர். ஆனால் அவருடைய கருங்கடல் மாளிகை, கேசினோக்கள், அதிநவீன ஹாக்கி ரிங்குகள், ஆடம்பரமான நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் மற்றும் இரவு விடுதிகள், பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள சாப்பாட்டு அறைகள், குளியலறைகள், பார் டேபிள்கள், விலை உயர்ந்த 700 க்கும் மேற்பட்ட கார்கள் என யூகிக்க முடியாத பிரம்மாண்ட வாழ்க்கையை புட்டின் வாழ்ந்து வருகிறார். அதிபர் புட்டினின் கை கடிகாரங்களின் விலை மட்டுமே அவர் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்ட ஒட்டுமொத்த சொத்து மதிப்பான 200 மில்லியன் டாலரை விட ஆறு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via