மணக்கும்  மதுரை மல்லிக்கு  புவிசார் குறியீடு

by Editor / 09-07-2021 04:12:43pm
மணக்கும்  மதுரை மல்லிக்கு  புவிசார் குறியீடு


உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டை யோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு அளிக்கப்படு வதே புவியியல் சார்ந்த குறியீடாகும். இந்தியாவின் பல பகுதிகளிலும் மல்லிகை பூ பயிரிடப்படுகிறது. இருப்பினும் மதுரை மல்லிக்கு என்று தனி பெருமையும் சிறப்பும் உண்டு. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தினை காப்பதற்கு இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இது மதுரை மல்லி என்ற பெயரில் மற்ற மல்லிகை பூவை விற்கவும், ஏமாற்றவும் முடியாது. புவிசார் குறியீடு மதுரை மல்லிக்கு கிடைத்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளதோடு, அதன் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஏற்கனவே காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் தட்டு, திண்டுக்கல் பூட்டு, பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு இவையெல்லாம் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் புவிசார் குறியீடுகளை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மதுரை மல்லி மிக பிரபலமானது. இதனால் மல்லிகையின் தலைநகராக மதுரை உருவாகியுள்ளதால் இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரமாக மாறியுள்ளது.

 

Tags :

Share via