ரயில்வே கேரள பெண்கேட் கீப்பரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த கேரள மாநில வாலிபர் கைது.
கேரளா மாநிலம் கொட்டாரக்கரையை சேர்ந்தவர் வித்தியா சந்திரன் இவர் கடந்த 7ஆண்டுகளுக்குமுன்னர் ரயில்வேயில் கேட் கீப்பராக பானையில் சேர்ந்த நிலையில் தற்போது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். அவர் வழக்கம் போல் கடந்த 16 ஆம் தேதி இரவு நெல்லையிலிருந்து-செங்கோட்டை நோக்கி சென்றபயணிகளை ரயிலுக்கு ரயில்வே கேட்டை மூடி திறக்கும் பணியில் ஈடுபட்டு விட்டு தனது அறையில் 8.30 மணியளவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர் ஒருவர் திடீரென பெண் ஊழியர் இருந்த அறைக்குள் புகுந்து அவரிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளார். உடனடியாக பெண் ஊழியர் கத்தி கூச்சலிடவே அருகில் இருந்த மற்ற பொதுமக்கள் வருவதற்குள் மர்ம நபர் அங்கு இருந்த தொலைபேசி ரிசிவரால் பெண்ணை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். பெரும் அதிர்ச்சியுடன் காணப்பட்ட அந்த ரயில்வே கேட் பெண் ஊழியரை உடனடியாக பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவர் நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.இது குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் தென்காசி ரயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர். உடனடியாக தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன்,உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் அங்கு முகாமிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.பணியில் இருந்த ரயில்வே பெண் ஊழியரிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தானா அல்லது ரயில்வே கேட்டின் அருகே மேம்பால பணி நடைபெற்று வரும் சூழ்நிலையில் அங்கு வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்கி பணிபுரிந்து வருவதால் அவர்களில் யாரேனும் ஒருவராக இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர் கேரளமாநிலம் கொல்லம் அருகிலுள்ள பத்தினாபுரம் பகுதியை சேர்ந்த முரளி மகன் அனீஸ் என்பது தெரியவரவே அவரை தமிழக கேரளா எல்லையான புளியரை பகுதியில் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.இவர்மீது ஏற்கனவே கேரளமாநிலத்தில் பவரு வழக்குகள் உள்ளன.அதில் ஒரு கற்பழிப்பு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :