எம்.எல்.ஏ ஆக பதவியேற்ற மம்தாவுக்கு  பிரபலங்கள் வாழ்த்து!

by Editor / 07-10-2021 07:06:17pm
எம்.எல்.ஏ ஆக பதவியேற்ற மம்தாவுக்கு  பிரபலங்கள் வாழ்த்து!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் அதே நேரத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். 


இருப்பினும் அவர் முதல்வராக பதவி ஏற்றதை அடுத்து அவர் ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது.
 இந்த நிலையில் சமீபத்தில் பவானிபூர் என்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்ற போது அந்த தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.


இந்த தொகுதியில் காங்கிரஸ் உள்பட வேறு எந்த கட்சியும் வேட்பாளரை நிறுத்தாத நிலையில் பாஜக வலிமையான ஒருவர் பெண் போட்டியாளர் ஒருவரை நிறுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி அபாரமாக வெற்றி பெற்றதையடுத்து அவர் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டார்.இதனை அடுத்து அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை மம்தா பானர்ஜி அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo