திருப்பத்தூருக்கு 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்

திருப்பத்தூருக்கு 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆலங்காயம் ஊராட்சியில் ரூ.30 கோடி செலவில் 7 கி.மீ., நீள சாலை, குமாரமங்கலம் மக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்க ரூ.6 கோடியில் துணை மின் நிலையம், நல்லகுண்டாவில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க ரூ.200 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா, ரூ.18 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம், ரூ.1 கோடியில் புதிய நூலகம் அமைக்கப்படும்” என்றார்.
Tags :