சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக, 48 இடங்களில் இலவச வைஃபை வசதி.
சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக, 48 இடங்களில் இலவச வைஃபை வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அளித்துள்ளது. திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துடன் இணைந்து பிஎஸ்என்எல்., நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது.நிலக்கல்லில் 13, பம்பையில் 12, சன்னிதான வளாகப் பகுதியில் 23 என மொத்தம் 48 இடங்களில் வைஃபை வசதிக்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.பிஎஸ்என்எல்-லின் வைஃபை சேவையைப் பெற முதலில் போனில் உள்ள வைஃபை ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். பின்பு, திரையில் காட்டப்படும் பி.எஸ்.என்.எல் வைஃபை அல்லது பி.எஸ்.என்.எல் பிஎம்வாணி எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து திறக்கப்படும் வலைப்பக்கத்தில், பத்து இலக்க மொபைல் எண்ணைத் பதிவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொலைபேசிக்கு 6 இலக்க எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். இதனை உள்ளீடு செய்ததும் வைஃபை சேவையைப் பெறலாம்.
Tags :