முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளித்த  வெற்றிமாறன் உயிரிழப்பு

by Editor / 05-10-2021 05:12:00pm
முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளித்த  வெற்றிமாறன் உயிரிழப்பு

முதலமைச்சர் முக ஸ்டாலின்  வீட்டின் எதிரே கடந்த 27ஆம் தேதி தீக்குளித்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் ஒருவர்  மரணம் அடைந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கடந்த 27ஆம் தேதி சென்னையில் உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின்  வீட்டின் முன் வெற்றிமாறன் என்பவர் திடீரென தீக்குளித்தார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை மீட்டு தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.40 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 


இந்த நிலையில் வாலிபர் வெற்றிமாறன் எதற்காக தீக்குளித்தார்? என்ன கோரிக்கையை அவர் முன்வைத்தார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் சுய நினைவில் இல்லை என்பதால் அவரிடம் விசாரணை செய்ய முடியவில்லை தற்போது விசாரணை தொடங்கி உள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த மேல் விவரங்கள் கிடைக்கும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via
Logo