ரயில் பாதை இணைப்பு பணி - ஹவுரா, புவனேஷ்வர் செல்லும் ரயில்கள் ரத்து.

by Editor / 17-08-2023 09:59:54am
ரயில் பாதை இணைப்பு பணி - ஹவுரா, புவனேஷ்வர் செல்லும் ரயில்கள் ரத்து.

ரயில் பாதை இணைப்பு பணி - ஹவுரா, புவனேஷ்வர் செல்லும் ரயில்கள் ரத்து: தென்னக இரயில்வே அறிவிப்பு

புவனேஸ்வர் - மஞ்சேஸ்வர் மற்றும் ஹரிதாஸ்பூர் - தன்மண்டல் ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாம் ரயில் பாதை இணைப்பு பணி நடைபெறுவதால் கன்னியாகுமரி - ஹவுரா - கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரம் - புவனேஷ்வர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்கள் முழுமையாக ரத்து

ஹவுரா - கன்னியாகுமரி

ஹவுரா - கன்னியாகுமரி செல்லக்கூடிய அதிவிரைவு ரயிலானது (வ.எண்.12665) ஆகஸ்ட் 21,29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி - ஹவுரா

கன்னியாகுமரி - ஹவுரா செல்லக்கூடிய அதிவிரைவு ரயிலானது (வ.எண்.12666) ஆகஸ்ட் 19,26 ஆகிய தேதிகளில் முழுமையாக  ரத்து செய்யப்படுகிறது.

புவனேஸ்வர் - ராமேஸ்வரம்

புவனேஸ்வர் - ராமேஸ்வரம் செல்லக்கூடிய அதிவிரைவு ரயிலானது (வ.எண்.20896) ஆகஸ்ட் 18,25 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ராமேஸ்வரம் - புவனேஷ்வர்

ராமேஸ்வரம் - புவனேஷ்வர் செல்லக்கூடிய அதிவிரைவு ரயிலானது (வ.எண்.20895) ஆகஸ்ட் 20,27 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

 

Tags : ஹவுரா, புவனேஷ்வர் செல்லும் ரயில்கள் ரத்து:

Share via