லாரி செட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி..வெட்டி கொலை 2 பேர் கைது.

by Editor / 17-08-2023 10:08:27am
 லாரி செட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி..வெட்டி கொலை 2 பேர் கைது.

தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற வாலிபர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி பத்துக்கும் மேற்பட்ட கும்பலால் வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் கருப்பசாமியின் ஆதரவாளர்கள் நேற்று சங்கரப்பேரி சாலையில் அமைந்துள்ள லாரி புக்கிங் ஆபீஸ் உரிமையாளர் சக்திவேல் என்பவர் அலுவலகத்திற்கு  வெளியே சேரில் அமர்ந்திருக்கும் போது அங்கு வந்த கும்பல் வெடிகுண்டு வீசி அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ், ஊரக துணை கண்காணிப்பாளர் சுரேஷ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

சக்திவேலை  கொலை செய்துவிட்டு இருசக்கரவாகனத்தில் தப்பிச் சென்ற  இருவரை விருதுநகர் போலீசார் கைதுசெய்து தூத்துக்குடி சிப்காட் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

Tags :  லாரி செட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி..வெட்டி கொலை 2 பேர் கைது.

Share via
Logo