முதலமைச்சருடன் புதிய இணைச் செயலாளர் சந்திப்பு

by Staff / 19-08-2024 01:36:58pm
முதலமைச்சருடன் புதிய இணைச் செயலாளர் சந்திப்பு

முதலமைச்சரின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமிபதி ஐஏஎஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) முதலமைச்சருக்கு புத்தகம் வழங்கி, வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதியை முதலமைச்சரின் இணைச் செயலாளராக நியமனம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டிருந்தார். தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

 

Tags :

Share via