பட்டமளிப்பு விழா மேடையில் ஆளுநரிடம் புகாரளித்த மாணவர்
கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்டு ஆளுநர் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது ஆங்கில பாடத்தில் முனைவர் பட்டம் பெற வந்த மாணவர் பிரகாஷ் மேடையிலேயே ஆளுநரிடம் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதில், பேராசிரியர்கள் பிஹெச்டி மாணவர்களிடம் பணம் கேட்பதாகவும், தங்களின் தனிப்பட்ட வேலைகளை செய்ய சொல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Tags :