மாணவிகளுக்கு வாள் விநியோகம் செய்த பாஜக MLA

by Staff / 14-10-2024 02:18:57pm
மாணவிகளுக்கு வாள் விநியோகம் செய்த பாஜக MLA

பீகார் மாநிலம், சீதாமரி நகர் பகுதியில் விஜயதசமி கொண்டாடப்பட்டது. இதற்காக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பாஜக எம்.எல்.ஏ மிதிலேஷ் குமார் பங்கேற்றார். அப்போது அவர், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வாள்களை வழங்கினார். பின்னர் இதுகுறித்து பேசிய அவர், “நமது சகோதரிகளைத் தீயவர்கள் தொடத் துணிந்தால், அவருடைய கை இந்த வாளால் வெட்டப்படும்" என கூறினார். அவரது இந்த செயல் மற்றும் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 

 

Tags :

Share via