வால்பாறை ஆற்றில் திடீர் வெள்ள பெருக்கு-சிக்கிக்கொண்ட சென்னை சுற்றுலாப்பயணிகள் .

by Editor / 24-04-2023 07:48:03pm
வால்பாறை ஆற்றில் திடீர் வெள்ள பெருக்கு-சிக்கிக்கொண்ட சென்னை சுற்றுலாப்பயணிகள் .

 கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில்  வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இங்கு மலை பிரதேசம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் இயற்கையை ரசிக்கவும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து அவதிப்பட்ட மக்கள் குளிர்ச்சியான பகுதிகளை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்தவர்கள் வால்பாறையை அடுத்த கூலங்கல்  ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது கன மழை பெய்த நிலையில் கூலங்கல் ஆற்றில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆபத்தை அறியாமல் குளித்து கொண்டிருந்த சென்னையை சேர்ந்த ராமசந்திரன், ,சுகன்யா ,பரசுராமன் ஆகிய மூவரும் ஆற்றில் மாட்டி கொண்டனர்.அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டு அலறியுள்ளனர். அவர்களது அலறலைக்கேட்ட அருகில் இருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக காவல் துறை, மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்ப்புபணிகள் துறையினர் துரிதமாக செயல்பட்டு ஆற்றில் உயிருக்கு போராடிய மூவரையும் போராடி மீட்டனர். பின் காவல் துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் ஆற்றில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories